திருச்சி மாவட்டத்தில், கிராமப்புற ஊராட்சிகளில் குடிநீர் தொடர்பாக ஏற்படும் புகார்களை தெரிவித்திட தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோடை வெயில் அதிகரித்துள்ள காரணத்தினாலும், நீர்நிலைகளில் போதுமான நீர் இல்லாத காரணத்தினாலும், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இருந்தபோதிலும், அனைத்துப் பகுதி பொதுமக்களுக்கும் சீரான முறையில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், கோடைகாலத்தில் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையினை போக்க தக்க முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடிநீர் விநியோகத்தில் ஏதேனும் குறைபாடு இருப்பின் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பின் மூலம் உடனடியாக சரிசெய்திட தொலைபேசி எண் வெளியிடப்படுகிறது. இதன்படி, குடிநீர் தொடர்பான புகார்களுக்கு 0431-2464058 என்ற தொலைபேசி எண்ணிலோ, 94882-37844 என்ற வாட்ஸ்ஆப் எண் மூலமாகவோ புகார்களை தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.