Rock Fort Times
Online News

பசுமை மயானங்களை அமைக்க வேண்டும் கலெக்டர்களுக்கு இறையன்பு ஐ.ஏ.எஸ். கடிதம்

தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:- தமிழ் நாட்டில் உள்ள பெரும்பாலான மயானங்கள் சீரமைக்கப்படாமல் உள்ளதாக பொதுமக்கள் தரப்பிலிருந்து புகார்கள் வருகின்றன. ஆகவே உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு சுடுகாடுகளுக்கு வரக்கூடிய பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். மயானங்களில் அமர்வதற்கு தேவையான கொட்டகைகள், நிழல் தரும் மரங்கள், பூச்செடிகள் நட்டு பசுமையான மயானங்களாக உருவாக்க தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். குடிநீர் வசதி, சுற்றுச்சுவர் போன்றவைகளையும் உருவாக்கி கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்