2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் வருகிற 2024ம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்
படுகிறது. அதற்கு முன்னதாக வருகிற 19ம் தேதி துபாயில் ஐபிஎல் 2024 ஏலம் நடக்க இருக்கிறது. இந்த ஏலத்திற்கு 1,166 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்து வைத்துள்ளார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், ஐபிஎல் 2024 ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், பதிவு செய்த 1166 வீரர்களில் 833 வீரர்கள் அதிரடியாக நீக்கப்பட்டு 333 வீரர்கள் மட்டுமே இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்ட செய்திக் குறிப்பில், இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடருக்கான வீரர்களின் ஏலத்திற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. துபாயில் டிசம்பர் 19 அன்று கோகோ கோலா அரங்கத்தில் நடக்க உள்ளது. இந்த ஏலத்தில் மட்டும் 333 வீரர்கள் பங்கேற்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த 333 வீரர்களில் 214 வீரர்கள் இந்தியர்கள் மற்றும் 119 வெளிநாட்டு வீரர்கள் இதில், 2 வீரர்கள் அசோசியேட் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.