9வது சர்வதேச யோகா தின விழாவையொட்டி திருச்சி மாநகர காவல் துறை , அரசு இயற்கை மற்றும் யோகா மருத்துவர்கள் இணைந்து கே.கே நகர் ஆயுதப்படை மைதானத்தில் யோகா தின நிகழ்ச்சியினை நடத்தினா். இதில் 500க்கும் மேற்பட்ட காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் பங்கேற்று ஆசனங்களையும், மூச்சுப் பயிற்சியையும் செய்தனா். இந்த நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் எம்.சத்திய பிரியா ஐபிஎஸ் , மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனா்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.