சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு திருச்சி அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில் போக்குவரத்து கழக பொது மேலாளர் சக்திவேல் தலைமையில் இன்று ( 08.12.2023) சர்வதேச மனித உரிமைகள் நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், போக்குவரத்து கழக பணியாளர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் துணை மேலாளர்கள் ரங்கராஜன் (பணியாளர் மற்றும் சட்டம்) ,கார்த்திகேயன்(தொழில்நுட்பம்) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல, திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், கண்ணனூர் அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் ஐஏஎஸ் மனித உரிமைகள் உறுதிமொழியினை வாசிக்க ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் மேயர் மு.அன்பழகன் தலைமையில், துணை மேயர் ஜி.திவ்யா, உதவி ஆணையர்கள், மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மனித உரிமைகள் தினமான 10-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் இன்று அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.