திருச்சிக்கு வருகை தந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வாக்குரிமையை காப்பாற்ற போராட வேண்டிய நிலை உள்ளது. உயிரோடு இருப்பவர்களை கூட இறந்தவர்கள் பட்டியலில் சேர்த்திருப்பது அதிர்ச்சியையும், ஜனநாயகத்திற்கு எதிரான செயலாகவும் உள்ளது. மிகக் குறுகிய காலத்திற்குள் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளை அவசர அவசரமாக நடத்தி முடித்திருப்பது பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. விஜய், களத்தில் நேரடியாக வந்து மக்களை சந்திக்காமல், களநிலவரத்தை அறியாமல் பேசுவது நகைச்சுவை. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் உண்மையாக களத்தில் நின்று பணியாற்றியவர் யார்?, தேர்தல் களத்தில் மக்களின் ஆதரவை நேரடியாக சந்தித்தவர்களுக்கே பேசும் தகுதி இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Comments are closed.