Rock Fort Times
Online News

தஞ்சையில் ஜன.19ம் தேதி ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ தி.மு.க. மகளிரணி மாநாடு…!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் குறைந்த மாதமே இருப்பதால் அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகமும் முதல் முறையாக களம் காண்கிறது. இதனால் அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில் தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டியில் ஜனவரி 19-ந்தேதி தி.மு.க. மகளிரணி மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, திமுக தலைமை கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ என்ற தலைப்பில் தஞ்சையில் வருகிற 19-ந்தேதி மாலை 4 மணிக்கு தி.மு.க. மகளிரணி மாநாடு நடைபெறுகிறது. தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி தலைமையில் நடைபெற இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். முன்னதாக, டிசம்பர் மாதம் 29-ந்தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ‘வெல்லும் தமிழ்ப்பெண்கள்’ தி.மு.க. மகளிரணி மாநாடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்