வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டும் வேலை, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஐக்கிய வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் செப். 28 முதல் 30-ம் தேதிவரை மூன்று நாட்கள் நாடு தழுவிய வங்கி வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. செப். 26, 27( சனி ஞாயிறு) வார இறுதி விடுமுறை நாட்களாகும். இதனால், தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டால்
வாடிக்கையாளர்களின் அத்தியாவசியத் தேவைகள் பெருமளவு பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. இதைக்கருத்தில் கொண்டு, செப். 27-ம் தேதி (ஞாயிறு) அனைத்து பொதுத் துறை வங்கிகள் மற்றும் பிராந்திய ஊரக வங்கிகளைத் திறக்க பாரத ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கியது.
இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை (செப். 27) அனைத்து வங்கிக் கிளைகள், அலுவலகங்கள், ஏடிஎம் வசதியுடன் இணைக்கப்பட்ட கிளைகள் மற்றும் பணப்பெட்டக மையங்கள் (கரன்சி செஸ்ட்கள்) ஆகியவை முழுமையாகச் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.