Rock Fort Times
Online News

புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் பக்தர்கள் விடிய விடிய கிரிவலம்…!

திருவண்ணாமலையில், மலையையே சிவனாக கருதி பக்தர்கள் வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள ‘அண்ணாமலை’ என்று அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் செல்கின்றனர். இந்த நிலையில் புரட்டாசி மாதத்திற்கான பவுர்ணமி நேற்று இரவு 11.06 மணி அளவில் தொடங்கியது. இதனால் நேற்று இரவு 7 மணிக்கு மேல் திருவண்ணாமலையில் மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. பின்னர் ஏராளமான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனர். பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உதயகுமார் தலைமையிலான போலீசார் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்