இந்திய ஜனநாயக கட்சியின் மாநில மாநாடு நாளை (02.03.2024) திருச்சி சிறுகனூரில் நடைபெற உள்ளது. இதன் காரணமாக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக திருச்சி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அவ்வறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது., சென்னையிலிருந்து திருச்சி வழியாக திண்டுக்கல் செல்லும், அனைத்து கனரக வாகனங்களும் பெரம்பலூர் பைபாஸ் ரோடு வழியாக துறையூர், முசிறி, குளித்தலை, மணப்பாறை, வையம்பட்டி வழியாக திண்டுக்கல் செல்ல வேண்டும். சென்னையிலிருந்து மதுரை நோக்கி செல்லும், அனைத்து கனரக வாகனங்களும் பெரம்பலூர் பைபாஸ் ரோடு வழியாக துறையூர், முசிறி, குளித்தலை, மணப்பாறை, புத்தாநத்தம், துவரங்குறிச்சி வழியாக மதுரை செல்லவேண்டும். மதுரையிலிருந்து சென்னை நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும், விராலிமலை வழியாக மணப்பாறை, குளித்தலை, முசிறி, துறையூர், பெரம்பலூர் வழியாக செல்லவேண்டும். சென்னையிலிருந்து கரூர் செல்லும் அனைத்து கனரக வாகனங்களும், பெரம்பலூர் பைபாஸ் ரோடு வழியாக துறையூர், முசிறி, குளித்தலை, கரூர் செல்ல வேண்டும். கரூரிலிருந்து தஞ்சாவூர் செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் குளித்தலை, முசிறி, துறையூர், பெரம்பலூர், அரியலூர், கீழப்பழூர், திருமானூர், திருவையாறு வழியாக தஞ்சாவூர் சென்று வரவேண்டும். அதேபோல் சேலத்திலிருந்து தஞ்சாவூர் நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் மேய்க்கல்நாயக்கன்பட்டி, தொட்டியம், முசிறி, துறையூர், பெரம்பலூர், அரியலூர், கீழப்பழூர், திருமானூர், திருவையாறு வழியாக தஞ்சாவூர் சென்று வரவேண்டும்.
சென்னையிலிருந்து ராமநாதபுரம் நோக்கி செல்லும், அனைத்து கனரக வாகனங்களும் பெரம்பலூர் பைாபாஸ் ரோடு வழியாக குன்னம், அரியலூர், கீழப்பழூர், புள்ளம்பாடி, கொள்ளிடம் “Y” ரோடு, திருச்சி பால்பண்ணை, திருவெறும்பூர், துவாக்குடி ரிங்க் ரோடு, கும்பக்குடி ஜங்சன், கீரனூர் வழியாக சென்று வரவேண்டும். தஞ்சாவூரிலிருந்து மதுரை நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் துவாக்குடி டோல்பிளாசா, துவாக்குடி ரிங் ரோடு, பஞ்சப்பூர், விராலிமலை, துவரங்குறிச்சி வழியாக சென்று வரவேண்டும். தஞ்சாவூரிலிருந்து திண்டுக்கல் நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் துவாக்குடி டோல்பிளாசா, துவாக்குடி ரிங் ரோடு, பஞ்சப்பூர், விராலிமலை, மணப்பாறை, வையம்பட்டி வழியாக சென்று வரவேண்டும். அதேபோல் சென்னையிலிருந்து மதுரை மற்றும் திண்டுக்கல் நோக்கி செல்லும் அனைத்து இலகுரக மற்றும் பயணிகள் வாகனங்களும், பாடாலூர், தச்சங்குறிச்சி, பூவாளூர், கொள்ளிடம் “Y” ரோடு, திருச்சி வழியாக செல்லவேண்டும். மதுரை மற்றும் திண்டுக்கல்லில் இருந்து சென்னை செல்லும் அனைத்து இலகுரக வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்களும், கொள்ளிடம் “Y” ரோட்டில் திரும்பி, நொச்சியம், மண்ணச்சநல்லூர், துறையூர், பெரம்பலூர் வழியாக செல்லவேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.