தூத்துக்குடியில் கொலை செய்துவிட்டு திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்த 3 கொலையாளிகள்! – (வீடியோ இணைப்பு)
தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து. இவரது மகன் வடிவேல் முருகன் (வயது28). இவர் நேற்று முன்தினம் கொலை வழக்கு ஒன்றில் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு பைக்கில் ஊருக்குச் சென்று கொண்டிருந்தார். தூத்துக்குடி – நெல்லை தேசிய நெடுஞ்சாலை பொட்டலூரணி விளக்கு அருகே சென்றபோது மர்ம நபர்கள் அவரை வழிமறித்து அரிவாளால் ஓட ஓட வெட்டி கொலை செய்தனர்.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை போலீசார் ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று அந்தக் கொலையில் தேடப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (28), அதே பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி (25), திருநெல்வேலி நாரண மலப்புரம் பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து (32) ஆகிய 3 பேர் திருச்சி ஐந்தாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்தனர். அதைத்தொடர்ந்து மாஜிஸ்ட்ரேட்டு பாலாஜி 3 பேரையும் காவலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர் அவர்களை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்று திருச்சி மத்திய ஜெயிலில் அடைத்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் தேடப்பட்டுவந்த கொலையாளிகள் திருச்சி நீதிமன்றத்தில் சரண் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.