Rock Fort Times
Online News

அரியலூர் மாவட்ட ஆட்சியரக துணை வட்டாட்சியர் பா.சரவணனுக்கு “மனித நேய மாமனிதர்” விருது…* நவீன் பைன் ஆர்ட்ஸ் சார்பில் வழங்கப்பட்டது..! (வீடியோ இணைப்பு)

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் துணை வட்டாட்சியராக பணிபுரிந்து வருபவர் பா.சரவணன். இவர் அரசு பணி மட்டுமின்றி கல்வி மற்றும் சமுதாயப் பணியிலும் அதிக ஈடுபாடு கொண்டு செயலாற்றி வருகிறார். அந்தவகையில் 2007ம் ஆண்டு முதல், டிஎன்பிஎஸ்சி, டெட், பிஜி டிஆர்பி போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து வருகிறார். அவரது இந்த அயராத பயிற்சியின் காரணமாக 1000க்கும் மேற்பட்டோர் அரசுப் பணி பெற்றுள்ளனர். குறிப்பாக, தனது கிராமத்தில் இருந்து 40 அரசு ஊழியர்களை உருவாக்கியுள்ளார். மேலும், பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கு தனது பேச்சின் மூலம் போட்டித்தேர்வு குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார். இந்தநிலையில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நவீன் பைன் ஆர்ட்ஸ் சார்பில் விருது வழங்கும் விழா கடந்த 06-09-2026 ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்றது.

இதில், துணை வட்டாட்சியர் பா.சரவணன் சேவைகளை பாராட்டி “மனிதநேய மாமனிதர்” விருது வழங்கப்பட்டது. விருதினை, சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் இயங்கும் குழந்தைகள் நலக் குழுவின் தலைவர் எம். ராஜ்குமார் மற்றும் திரைப்பட நடிகர், இயக்குனர் அனுமோகன் ஆகியோர் வழங்கினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்