Rock Fort Times
Online News

தமிழக சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு வெளியேற்றம்…சபாநாயகர் நடவடிக்கை..!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (08-09-2026) காலை 9:30 மணிக்கு தொடங்கியது. முதலில் திமுக கொறடா எ.வ.வேலு, நேற்றைய (செப்.7) கூட்டத்தொடரில் முதலமைச்சர் விஜய் பேசியபோது சட்டப்பேரவை விதிமுறையை மீறியதாக குற்றம் சாட்டினார். மேலும், விசாரணையில் உள்ளவற்றை பற்றியும், அவையில் இல்லாதவர்களை பற்றியும் முதலமைச்சர் பேசியவைகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் எனவும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார். மேலும், அமலாக்கத்துறை சார்பில் சமர்ப்பித்த ஆவணம் குறித்த வழக்கானது நீதிமன்றத்தில் இருக்கும் போது அதனை முதலமைச்சர் ஆதாரமாக காட்டலாமா?. சர்க்காரியா கமிஷனில் இவர்கள் தான் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்படாத நிலையில், அதை வைத்து திமுக மீது மீண்டும், மீண்டும் குற்றம் சுமத்துவது அரசியல் ஆதாயத்திற்காகவா? மறைந்த முரசொலி மாறன் பற்றி பேசவேண்டிய அவசியம் என்ன? ஆகிய மூன்று முக்கிய கேள்விகள் திமுக சார்பில் முன் வைக்கப்பட்டன. ஆனால், ஏற்கனவே சட்டப்பேரவையில் அதுகுறித்து விவாதிக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டிய சபாநாயகர் அவற்றை நீக்கவேண்டிய அவசியம் இல்லை என பதிலளித்தார். உடனே, சபாநாயகர் இருக்கை முன்பு கூடிய எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, சபாநாயகரின் உத்தரவின்பேரில் அமளியில் ஈடுபட்டவர்களை அவைக் காவலர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்