விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் சேசு. பின்னர் நடிகர் தனுஷ் ஹீரோவாக அறிமுகமான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் சினிமா துறையில் காலடி எடுத்து வைத்தார். அதனைத்தொடர்ந்து பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இவர், சமீப காலமாக தொடர்ந்து சந்தானத்தின் படங்களில் நடித்து தன்னுடைய காமெடி மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்தார். சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான ‘வடக்குபட்டி ராமசாமி’ படத்தில் சேசு நடித்த கதாபாத்திரம் அதிகம் பேசப்பட்டது. இந்நிலையில், கடந்த மார்ச் 15ம் தேதி உடல்நல குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சேசு, சிகிச்சை பலனின்றி இன்று(26-03-2024) உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகை சேர்ந்தவர்கள் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.