Rock Fort Times
Online News

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் கலைஞர் சுடர் ஒப்படைப்பு…

திருவாரூர் மாவட்டம் காட்டூரில் முன்னாள் முதலமைச்சர் மறைந்த மு.கருணாநிதிக்கு கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று ( 20.06.2023 ) நடக்கிறது. விழாவில் கலந்து கொள்வதற்காக அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தி.மு.க.நிர்வாகிகள் திருவாரூரில் குவிந்துள்ளனர். இந்த நிலையில் திருச்சி தெற்கு மாவட்ட மாணவர் அணியினரும், திருச்சி கிழக்கு மாநகர மாணவர் அணியினரும் கடந்த சனிக்கிழமை அன்று திருச்சி சிந்தாமணி அண்ணா சிலையில் இருந்து “கலைஞர் சுடரை” ஏந்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைப்பதற்காக திருவாரூர் நோக்கி புறப்பட்டனர். இதனை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். இந்த கலைஞர் சுடர் திருவாரூர் சென்றடைந்தது. பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அதனை ஒப்படைத்தனர்.

இந்நிகழ்வில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி.ஆர். பி.ராஜா, தி.மு.க.மாணவரணி செயலாளர் சி.வி. எம்.பி.எழிலரசன், திருச்சி மாநகர செயலாளர் மு.மதிவாணன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் முத்து வெங்கடேஷ், கிழக்கு மாநகர மாணவரணி அமைப்பாளர் அசாருதீன் ஆகியோர் கலந்து கொண்டனா்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்