Rock Fort Times
Online News

ரயில் பயணிகளுக்கு இனிப்பான செய்தி- அகமதாபாத்-திருச்சி இடையே ரயில் சேவை நீட்டிப்பு…!

அகமதாபாத்-திருச்சி இடையேயான வாராந்திர ரயில் சேவை ஆகஸ்ட் மாதம் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து  தெற்கு ரயில்வே சார்பில்  வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு ஒன்றில், குஜராத மாநிலம் அகமதாபாத்தில் இருந்து திருச்சிக்கு வியாழக்கிழமை தோறும் சிறப்பு ரயில் (எண் 09410) இயக்கப்படுகிறது.  இந்த ரயில் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம்1, 8, 15 ஆகிய தேதிகளிலும் இயக்கப்படும். மறுமார்க்கமாக திருச்சியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் (09420) தொடர்ந்து  ஜூலை 28, ஆகஸ்ட்  4, 11, 18 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.  இந்த ரயில் தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன்  கோவில், சீர்காழி, சிதம்பரம், கடலூர் துறைமுகம், விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி, திருத்தணி, ரேணிகுண்டா வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்