தமிழகத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (டான்செட் ) கட்டாயம் தேர்ச்சி பெறவேண்டும். இதேபோல், எம்இ, எம்டெக், எம்பிளான், எம்ஆர்க் ஆகிய முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேரவும் பொது பொறியியல் நுழைவுத் தேர்வில் (சீட்டா) தேர்ச்சி பெறுவதும் அவசியமாகும். இந்த தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. அதன்படி 2024-ம் ஆண்டுக்கான டான்செட் தேர்வு மார்ச் 9-ம் தேதியும் சீட்டா தேர்வு மார்ச் 10-ம் தேதியும் நடத்தப்பட உள்ளது. திருச்சியைப் பொறுத்தவரை இந்நுழைவுத்தேர்வுக்கான தேர்வுமையம் அண்ணா பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது தேர்வுக்கான ஏற்பாடுகள் குறித்து கல்லூரி முதல்வர் டி.செந்தில்குமார் தெரிவித்துள்ளதாவது., எம்.சி.ஏ படிப்புக்கு 1,241 பேர், எம்.பி.ஏ படிப்புக்கு 1,319, எம்.இ, எம்.டெக் படிப்புகளுக்கு 305 பேர் என மொத்தம் 2,865 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவுள்ளனர். இவர்களுக்காக திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கல்லூரி வரை சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்நிலையில் உள்ளன. தேர்வு மையத்தில் மாணவ, மாணவிகளுக்கு குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்களுக்கான அனுமதிச் சீட்டுடன் தேர்வில் பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளார்
Comments are closed, but trackbacks and pingbacks are open.