Rock Fort Times
Online News

பக்ரீத் பண்டிகையையொட்டி சமயபுரம் ஆட்டுச் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை..

திருச்சி சமயபுரம் ஒத்தக் கடை பகுதியில் வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும் ஆட்டுச்சந்தை புகழ்பெற்றது. வழக்கமாக இந்த சந்தைக்கு வாரந்தோறும் சுமார் 3 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். பக்ரீத் பண்டிகையை ஒட்டி இந்த வாரம் வழக்கத்தைவிட அதிக அளவில் ஆடுகள் விற்பனைக்கு அழைத்து வரப்பட்டிருந்தன.

பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், தஞ்சை, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 30 ஆயிரம் ஆடுகளை வியாபாரிகள் வாகனங்களில் ஏற்றி வந்திருந்தனர். இன்று ( 24.06.2023 ) அதிகாலை 4 மணியில் இருந்தே விற்பனை தொடங்கியது. இறைச்சிக்கடை வியாபாரிகள் மற்றும் இஸ்லாமியர்கள் நேரடியாக வந்து தங்களுக்கு பிடித்த ஆடுகளை தேர்ந்தெடுத்து வாங்கினர்.

11 மணி வரை சுமார் 15 ஆயிரம் ஆடுகள் விற்பனையாகி உள்ளது. பக்ரீத் பண்டிகை முன்னிட்டு இன்று மதியம் 1 மணி வரை சந்தை நடக்கும் என்பதால் இன்னும் கூடுதலாக ஆடுகள் விற்பனையாக வாய்ப்புள்ளது. இன்று மட்டும் சுமார் ரூ.3 கோடி அளவுக்கு விற்பனை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்