Rock Fort Times
Online News

மதுரை அரசு மருத்துவமனையில் “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை” தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்…!

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் தமிழக வெற்றி கழகம் அறிவித்து இருந்தது. அதன்படி, தற்போது ஆட்சிக்கு வந்துள்ள த.வெ.க. அரசு, தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இந்தத் திட்டத்தின் தொடக்க விழா நிகழ்ச்சி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் இன்று(28-09-2026) நடைபெற்றது.
நிகழ்வில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வா் விஜய், இன்று காலை 10 மணி அளவில் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு புறப்பட்டார். மதுரை விமான நிலையத்திலிருந்து சாலை வலமாக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு புறப்பட்டார் அவருக்கு வழிநெடுக பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள், ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ச.ஜோசப் விஜய் பங்கேற்று முதல்கட்டமாக 30 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்து, தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். முன்னதாக சுகாதாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் வரவேற்று பேசினார். விழாவில் அமைச்சர்கள் ஆனந்த் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்