திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் திருச்சி கண்டோன்மென்ட் உதவி கமிஷனர் பாஸ்கர் தலைமையில் எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 4 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் இன்று (10-11-2024) ராம்ஜிநகர் மில் காலனி பகுதியில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் உள்ள வீடுகளுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. காலை 5 மணி முதல் காலை 8 மணி வரை சுமார் 3 மணி நேரம் இந்த அதிரடி சோதனை நடைபெற்றது. மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த ராம்ஜி நகர் மில் காலனியை சேர்ந்த சரவணன் அவரது மனைவி சுவேகா, தீனதயாளன், ஷீலா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து 3 1/2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Comments are closed.