திருச்சி கருமண்டபம் ஜே.ஆர்.எஸ் நகர் பகுதியில் ஒரு கும்பல் கஞ்சா விற்பனை செய்வதாக செசன்ஸ் கோர்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கே கஞ்சா விட்டுக் கொண்டிருந்த புங்கனூர் புதுக்காட்டூர் பகுதியைச் சேர்ந்த சசிதரன் (வயது 47), திருச்சி தாராநல்லூர் பூக்கொல்லை தெரு பகுதியைச் சேர்ந்த முகமது ஜாவித் (19), திருச்சி, மண்ணச்சநல்லூர் பூனாம் பாளையம் பகுதியைச் சேர்ந்த கிரிதரன் (19), உறையூர் நாடார் தெரு பகுதியை சேர்ந்த அப்துல் காதர் (19 ) நான்கு பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை இடமிருந்து 2 கிலோ 460 கிராம் கஞ்சா, இரண்டு மோட்டார் சைக்கிள் ரூ. 30,000 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
Comments are closed.