முன்னாள் முதலமைச்சர் மறைந்த கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி திருச்சியில் வருகிற 24ம் தேதி 3 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் , நடைபெறுகின்றன. அதன்படி, திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அரசு உயர்நிலைப்பள்ளி, அரியமங்கலம் எஸ்.ஐ.டி.கல்லூரி வளாகம், லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 இடங்களில் காலை 8 முதல் மாலை 5 மணி வரை மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது. இம்முகாமில், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சிறுநீரகம், மார்பகம் மற்றும் கருப்பைவாய் புற்றுநோய், மகளிர் மருத்துவம், கண், காது, மூக்கு தொண்டை, பல் மருத்துவம், எலும்பு, மன நல மருத்துவம், நரம்பியல், இருதயம் உள்ளிட்ட சிகிச்சைகள் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. மேலும் ஸ்கேன், எக்ஸ்ரே, இசிஜி, எக்கோ மற்றும் ரத்தச் சோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டு சோதனை முடிவுகள் , அவரவர் செல்போன் வாட்ஸ்அப்புக்கு தெரிவிக்கப்படும். சிறப்பு மருத்துவர்களை கொண்டு நடைபெற உள்ள இம்முகாமில் பொது மக்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் ஐஏஎஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.