Rock Fort Times
Online News

திருச்சி, திருவள்ளுவர் ட்ரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் எம்ப்ளாயிஸ் கோ-ஆப்பரேட்டிவ் சொசைட்டியில் இலவச கண் மருத்துவ முகாம்…!

திருச்சி, தில்லைநகர் 11வது கிராஸ், லட்சுமி ஆர்க்கேடில் இயங்கிவரும் திருவள்ளுவர் ட்ரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் எம்ப்ளாயிஸ் கோ-ஆப்பரேட்டிவ் சொசைட்டி சார்பில் இன்று (மார்ச் 28) மேக்ஸ் விஷன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இம்முகாமில் கண்ணீர் அழுத்தம், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, டயாபடிக் ரெட்டினோபதி உள்ளிட்ட பல்வேறு கண் குறைபாடுகளுக்கு பொதுமக்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டனர். கண்பரிசோதனை செய்த மருத்துவர்கள் உரிய ஆலோசனை வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை திருவள்ளுவர் எம்ப்ளாயிஸ் கிரெடிட் சொசைட்டியின் செயலாளர் கிருஷ்ணன் ஜெயசங்கர் மற்றும் திருச்சி கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்