திருச்சியில் நேற்றிரவு பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை கோடை பெய்தது. இதில் ஸ்ரீரங்கம் திருவள்ளூர் வீதியில், சுமார் 40 ஆண்டு காலம் பழமையான வேப்பமரம் வேரோடு சாய்ந்தது. இந்த மரம் அருகில் இருந்த மின்பாதை மீது விழுந்ததால் அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், மின்தடை காரணமாக போதிய வெளிச்சம் இன்றி மரத்தை அப்புறப்படுத்தும் பணிகள் தாமதம் ஆகின. மரம் விழுந்த நேரத்தில் அப்பாதையில் யாரும் கடந்து செல்லாததால் அதிர்ஷ்டவசமாக சேதம் ஏதும் இல்லை.
இந்த மரத்தை மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் அப்புறப்படுத்தி வருகின்றனர். காலையில் ஆரம்பித்த பணி தற்போது வரை நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் இதனால் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.