Rock Fort Times
Online News

தஞ்சை, செங்கிப்பட்டியில் ஜனவரி 19-ல் “வெல்லும் தமிழ் பெண்கள்” மாநாடு நடைபெறும் இடத்தை 4 அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு…!

திமுக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் ஜனவரி 19-ல் “வெல்லும் தமிழ் பெண்கள்” டெல்டா மண்டல தி.மு.க. மகளிர் அணி மாநாடு நடைபெறுகிறது. அதற்கான இடத்தை கழக முதன்மைச் செயலாளரும், தமிழ்நாடு நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு, இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மற்றும் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன்,மெய்ய நாதன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மாநாடு நடைபெறும் இடத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர்கள் விரிவாக ஆய்வு செய்தனர். மாநாடு சிறப்பாக நடைபெற தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் முறையாக மேற்கொள்ள அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினர். இந்த நிகழ்வில் கழக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற முன்னாள், இன்னாள் உறுப்பினர்கள், கழக மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்