முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீனில் விடுவிப்பு: ஸ்ரீரங்கம் பழனியாண்டி எம்எல்ஏ இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…!
சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 471 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று(26-09-2024) ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதனை வரவேற்கும் விதமாக தமிழகம் முழுவதும் திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். திருச்சியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஆதரவாளர்கள் யாரும் கொண்டாட்டங்களில் ஈடுபடவில்லை. ஆனால், அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளராக இருக்கும் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ பழனியாண்டி மாம்பழச் சாலையில் உள்ள ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அலுவலகம் முன்பு கட்சித் தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும் இனிப்பு வழங்கிக் கொண்டாடினார்.
Comments are closed.