Rock Fort Times
Online News

வீரமங்கை வேலு நாச்சியார் வழியில், மக்கள் விரோத ஆட்சியாளர்களை விரட்டி, மக்களாட்சியை அமைக்க உறுதியேற்போம்- விஜய்…!

ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் இந்தியப் பெண் அரசி வேலு நாச்சியார். இன்று (ஜன.3) அவரது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வீரமங்கை வேலுநாச்சியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதுதொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடி, தாய் மண்ணை மீட்ட முதல் இந்தியப் பெண் போராளி. சமூக, சமய நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த எழுச்சிக் கனல். எம் கொள்கைத் தலைவர். அவரது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். தமிழ் மண்ணுக்குப் பெருமை சேர்த்த வீரமங்கை ராணி வேலு நாச்சியார் வழியில், மக்கள் விரோத ஆட்சியாளர்களை விரட்டி, மக்கள் விரும்பும் மக்களாட்சியை அமைக்க உறுதியேற்போம். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்