Rock Fort Times
Online News

லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கான எப்.சி.கட்டண உயர்வு 3 மாதங்களுக்கு நிறுத்தி வைப்பு..!

கனரக வாகனங்களுக்கான தகுதிச் சான்றிதழ் புதுப்பிப்பதற்கான கட்டணத்தை மத்திய அரசு 10 மடங்கு உயர்த்தி உள்ளது. 10 முதல் 15 ஆண்டுகள் வாகனங்களுக்கு ஆயிரம் ரூபாய் மற்றும் கூடுதல் வரி எனவும்,15 முதல் 20 ஆண்டுகள் வாகனங்களுக்கு 2,500 ரூபாயில் இருந்து 12,500 ஆகவும், 20 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களுக்கு 3,500 ரூபாயில் இருந்து 25 ஆயிரம் ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்கு லாரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில்,  கனரக வாகனங்களுக்கான தகுதி சான்றிதழ் புதுப்பிக்கும் கட்டணத்தை ரத்து செய்யும் வரை பிப்.,25 நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற  வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தினர் அறிவித்தனர். இந்நிலையில் லாரி உள்ளிட்ட வாகங்களுக்கான தகுதிச் சான்றிதழ்(FC) கட்டண உயர்வு 3 மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பழைய வாகனங்களுக்கு தகுதிச் சான்றிதழ் பெறுவதற்கு பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்