அதிவேகமாக சென்ற கார் மோதியதில் மகனை ஏற்றிக்கொண்டு பைக்கில் சென்றுகொண்டு இருந்த தந்தை பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை நவக்கரையை அடுத்த கே.ஜி.சாவடி பகுதியில் உள்ள முக்கிய சாலையில் ஜாகிர் உசேன் என்பவர் தன்னுடைய 15 வயது மகன் அஜ்மலை கபடி போட்டிக்காக பைக்கில் அழைத்து சென்றுகொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த கார் வேகமாக ஜாகிர் உசேனின் பைக் மீது மோதியது. இதில் தந்தையும் மகனும் தூக்கி வீசப்பட்டனர். அவர்கள் ஓட்டி வந்த பைக், பின்னால் வந்த வேன் கண்ணாடி மீது மோதி குத்தி நின்றது. விபத்து ஏற்படுத்திய சாம்பல் நிற கார் அப்பகுதியில் நிற்காமல் மோதிவிட்டு வேகமாக சென்றது. பைக் ஓட்டிச் சென்ற ஜாகிர் உசேன் கார் மோதி சாலையில் வேகமாக விழுந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து ஏற்பட்டவுடன் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற கார் ஓட்டுநரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.