தஞ்சாவூர் அருகே உள்ள தோட்டக்காடு காமராஜர் நகரைச் சேர்ந்தவர் எஸ். சத்தியமூர்த்தி (51). கூலித் தொழிலாளியான இவரது மகன் அபிஷேக்கின் (22) பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில், அபிஷேக்கின் நண்பரான தோட்டக்காடு மாதா கோயில் தெருவைச் சேர்ந்த ஏசுதாஸ் மகன் ரூபன் (22) கலந்து கொண்டார். அப்போது, அபிஷேக்கின் தங்கையை ரூபன் கிண்டல் செய்துள்ளார். இதை தட்டிக்கேட்ட சத்தியமூர்த்தி, ரூபனின் வீட்டுக்குச் சென்று அவரது பெற்றோரிடமும் கூறியுள்ளார். பின்னர், காமராஜ் நகர் தெரு முனையில் நின்றுகொண்டிருந்த ரூபனுக்கும், சத்தியமூர்த்திக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ரூபன், சத்தியமூர்த்தியை அடித்து கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த சத்தியமூர்த்தி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து ரூபனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.