Rock Fort Times
Online News

பரமத்திவேலூரில் வாகன சோதனையில் சிக்கிய ரூ.2.83 கோடி- மற்றொரு இடத்தில் ரூ.4 கோடி தங்க நகைகள் பறிமுதல்…!

நாமக்கல் மாவட்ட எல்லை பகுதியான பரமத்திவேலூர் காவிரி பாலம் அருகே உள்ள சோதனை சாவடியில், நேற்று இரவு தேர்தல் பறக்கும் படை அதிகாரி அஸ்வின்குமார் தலைமையிலான குழுவினர், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கரூரில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். அந்த காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.2 கோடியை 83 லட்சத்து 40 ஆயிரம் இருந்தது. இதுகுறித்து காரில் வந்தவர்களிடம் விசாரித்த போது, ஏடிஎம் மையத்தில் வைப்பதற்காக பணத்தை எடுத்து வந்ததாக தெரிவித்தனர். ஆனால், அதற்கான ஆவணங்கள் ஏதும் அவர்களிடம் இல்லை. இதையடுத்து ரூ.2.83 கோடியை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் அதனை பரமத்தி வேலூர் துணை தேர்தல் நடத்தும் அலுவலர் பாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர்.

இதேபோல, மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அவர்கள் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான நகைகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

🔴: ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் திருப்பவித்ரோத்ஸவம் 6-ம் திருநாள்

1 of 850

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்