Rock Fort Times
Online News

தூத்துக்குடி அருகே கோர விபத்து தஞ்சாவூர் மாவட்ட நீதிபதி உட்பட இருவர் படுகாயம் – 4 பேர் பலி !

தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதியாக பணிபுரிந்து வரும் பூர்ன ஜெய ஆனந்த், நீதிமன்ற அலுவலக உதவியாளர்கள் உதயசூரியன், ஸ்ரீதர் குமார், காவலர் நவீன்குமார், ரெக்கார்டு கிளார்க் வாசு ராமசந்திரன், வழக்கறிஞர் தனஞ்செய ராமசந்திரன் ஆகியோர் ஒரே காரில் திருச்செந்தூர் சென்று விட்டு, மீண்டும் தஞ்சாவூர் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். தூத்துக்குடி – மதுரை பைபாஸ் , எட்டயபுரம் மேல கரந்தை ஜங்ஷன் அருகே முன்னால் ஜிப்சம் லோடு ஏற்றிச் சென்று கொண்டிருந்த லாரி மீது இவர்களது கார் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஸ்ரீதர்குமார், நவீன்குமார், வாசு ராமநாதன், தனஞ்செய ராமசந்திரன் ஆகிய 4பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் நீதிபதி பூர்ன ஜெய ஆனந்த் மற்றும் அலுவலக உதவியாளர் உதயசூரியன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருப்புகோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லாரியை ஓட்டிவந்த கடலூர் மாவட்டம் பொம்மரக்குடி குளஞ்சி மகன் விஜய் ராஜ் (27) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தை தூத்துக்குடி எஸ்.பி ஆல்பர்ட் ஜான், விளாத்திகுளம் டி.எஸ்.பி அசோகன் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து மாசார்பட்டி இன்ஸ்பெக்டர் லட்சுமி பிரபா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்