திருவெறும்பூர் அருகேயுள்ள பனையக்குறிச்சியை சார்ந்தவர் சுந்தர்ராஜன். இவர் மீது கொலை அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. திருவெறும்பூர் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு ரௌடியாகவும் இவரது பெயர் உள்ளது. இந்நிலையில் இன்று காலை அவரது சித்தப்பா மணி என்பவரது வீட்டில், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சுந்தர்ராஜன் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இதை பார்த்த அவரது சித்தப்பா உள்ளிட்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்ததோடு, உடனடியாக திருவரம்பூர் போலீசருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெறும்பூர் டிஎஸ்பி ஜாபர் தலைமையிலான போலீசார்,ரவுடி சுந்தர்ராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருச்சி எஸ் பி வருண்குமார் ஐபிஎஸ் சம்பவ இடத்தை நேரில் பார்த்து பார்வையிட்ட ஆய்வு செய்தார். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் லீலி வரவைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் சுந்தர்ராஜன் கொலை செய்யப்பட்டது முன்விரோதம் காரணமாகவா? அல்லது தொழில் போட்டியா? என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். ரவுடி சுந்தர்ராஜன் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பனையக்குறிச்சி கிராமத்தில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed.