Rock Fort Times
Online News

பிரபல நகைச்சுவை நடிகை பிந்துகோஷ் காலமானார்…!

உடல்நலப் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த நகைச்சுவை நடிகை பிந்து கோஷ் காலமானார். 80 காலகட்டத்தில் மனோரமா, கோவை சரளா போல காமெடியில் கலக்கியவர் நடிகை பிந்து கோஷ். முன்னணி நடிகர்கள் பலரின் படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட நூறு படங்களுக்கு மேல் நடித்திருக்கும் இவருக்கு தற்போது 76 வயதாகிறது. வயது மூப்பின் காரணமாக கடந்த சில வருடங்களாக உடல்நலப் பிரச்னையை எதிர்கொண்ட நிலையில், இன்று(16-03-2025) அவர் உடல்நலக் குறைவால் காலமானார். இதனை அவரது மகன்கள் உறுதிப்படுத்தினர்.

குண்டான உருவம், காமெடி நடிப்பு, குழந்தைத்தனமான சிரிப்பு மற்றும் வசனம் ஆகியவை தான் பிந்துகோஷ் . இவர் சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக கமல்ஹாசன் அறிமுகமான களத்தூர் கண்ணம்மா என்ற படத்தில் குரூப் டான்ஸ் ஆக நடனமாடி உள்ளார். அதன் பின் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக பிந்துகோஷ் நடித்தார். இந்தநிலையில் கங்கை அமரன் இயக்கத்தில் பிரபு நடிப்பில் உருவான கோழி கூவுது என்ற திரைப்படத்தில் தான் காமெடி நடிகையாக அறிமுகமானார். இந்த படத்தில் அவரது காமெடி சூப்பராக எடுபட்டதையடுத்து பல திரைப்படங்களில் அவர் தொடர்ச்சியாக காமெடி கதாபாத்திரத்தில் நடித்தார். சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், மோகன், பிரபு, விஜயகாந்த், உள்ளிட்டவர்களின் படங்களில் பிந்துகோஷ் நடித்தார். நடிகை பிந்துகோஷ் திரையுலகில் உச்சத்தில் இருந்த போது சென்னை தசரதபுரத்தில் பங்களா போன்ற வீட்டை வாங்கினார். வீட்டு வேலை, சமையல் வேலை என தனித்தனியாக நான்கு வேலையாட்கள் அவரிடம் வேலை பார்த்தனர், அவர் ஆசை ஆசையாய் 10 நாய்களை வளர்த்தார். தைராய்டு உள்பட பல நோய்கள் அவருக்கு இருந்ததால் அவரது சினிமா வாய்ப்பு குறைந்து போனது. ஒரு கட்டத்தில் சம்பாதித்த சொத்து எல்லாம் சிகிச்சைக்காகவே செலவழித்தார். ஒரு கட்டத்தில் சிகிச்சைக்கே பணம் இல்லாமல் வீடு, கார் எல்லாவற்றையும் விற்றுவிட்டு ஒரு சிறிய வாடகை வீட்டில் ரசித்து வந்தார். இந்த நிலையில் உடல் நல குறைவு காரணமாக இன்று அவர் உயிரிழந்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்