Rock Fort Times
Online News

போலி பாஸ்போர்ட் விவகாரம்: ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஆணை..

போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் ஏ.டி ஜி.பி.டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2018 -ம் ஆண்டு ஜூன் முதல் 2020 ஜூலை வரை மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் ஆக பதவி வகித்தவர் டேவிட்சன் ஆசீர்வாதம். அப்போது, வெளிநாட்டினருக்கு பாஸ்போர்ட் வழங்கியதில் முறைகேடு செய்யப்பட்டதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. போலி ஆவணங்களை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான போலி பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக தலைமை செயலாளருக்கு மத்திய உள்துறை அமைச்சக உயர் அதிகாரி கடிதம் எழுதியுள்ளார். உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் ஆசீர்வாதம் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்