Rock Fort Times
Online News

காரைக்குடியில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும் விரைவு ரயில் 13ம் தேதி முதல் 21ம் தேதி வரை ரத்து- பல்வேறு ரயில் சேவையிலும் மாற்றம்…!

திருச்சி ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட ரயில்வே பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில், காரைக்குடியில் இருந்து திருச்சிக்கு காலை 9.40 மணிக்கு இயக்கப்படும் மெமு விரைவு ரயில் (எண்: 06888) நவம்பர் 13 முதல் 21 வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. மயிலாடுதுறை – திருச்சி விரைவு ரயில் நவ. 13 முதல் நவ.21 வரையும், விழுப்புரம் – திருச்சி மெமு விரைவு ரயில் நவ. 12 முதல் நவ.21 வரை பொன்மலை வரை மட்டும் இயக்கப்படும். ஈரோடு-திருச்சி பயணிகள் ரயில் நவ. 13 முதல் 21-ஆம் தேதி வரை திருச்சி கோட்டை வரை இயக்கப்படும். திருச்சி -விழுப்புரம் மெமு ரயில் நவ.11 முதல் 21-ஆம் தேதி வரை பொன்மலையிலிருந்து இயக்கப்படும். திருச்சி – மயிலாடுதுறை விரைவு ரயில் நவ 1 முதல் 21-ஆம் தேதி வரை திருவெறும்பூரிலிருந்து இயக்கப்படும். திருச்சி – பாலக்காடு விரைவு ரயில் நவ. 11 முதல் நவ.21 வரை திருச்சி கோட்டையிலிருந்து இயக்கப்படும். ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி சுத்ரா திருநெல்வேலி விரைவு ரயில் நவ.14-ஆம் தேதியும், நாகர்கோவில் வாராந்திர விரைவு ரயில் நவ. 17-தேதியும் திருச்சி வழியாக செல்வதற்கு பதிலாக கரூர், திண்டுக்கல் வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்