Rock Fort Times
Online News

துறையூர் அருகே, வீடு கட்ட மண்ணெடுத்து விட்டு அரசு நிதியில் செலவு கணக்கு ! கிராமசபை கூட்டத்தில் சலசலப்பு (வீடியோ இணைப்பு)

திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சொரத்தூர் ஊராட்சியில் 78வது சுதந்திர தின விழாவையொட்டி கிராம சபை கூட்டம்  நடைபெற்றது.இக்கூட்டத்தில் ஊராட்சி செயலர் அழகேசன் நிதிநிலை அறிக்கையை வாசித்தார். அப்போது ஊராட்சியில் குடிநீருக்காக சாலையில் பள்ளம் தோண்டி அந்த மண் அகற்றப்பட்டதற்காக ரூ.17,000 ஊராட்சி நிதியிலிருந்து செலவு செய்யப்பட்டதாக நிதிநிலை அறிக்கையில் வாசிக்கப்பட்டது.  ஆனால்,அதிலிருந்து எடுக்கப்பட்ட மண்ணை பொறுப்பு தலைவரான பொன்னுசாமி தனது சொந்த வீடு கட்டுவதற்காக பயன்படுத்தியதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். ஆகவே செலவு செய்யப்பட்டதாக சொல்லப்படும் ரூ.17,ஆயிரத்தை மீண்டும் பஞ்சாயத்து கணக்கில் சேர்க்குமாறும், அரசு பணத்தை கையாடல் செய்துள்ள பொறுப்புத் தலைவர் பொன்னுசாமி மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் ஒன்றுகூடி கோரிக்கை விடுத்தனர். இதனால் கிராம சபை கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

🔴LIVE : காவல்துறை மீது தாக்குதல் அதிகரித்துள்ளது திருச்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி

1 of 938

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்