அதிமுக அவசர செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், அவைத்தலைவர் தமிழுடன் உசேன் தலைமையில் கூடியது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் செயற்குழு உறுப்பினர்கள் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், கட்சியின் செயற்குழு உறுப்பினர்களான தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், பிற மாநில செயலாளர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்கனவே கடந்த ஒன்பதாம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு அந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டு, தற்போது அவசர செயற்குழு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் அதிமுக அவசர செயற்குழு கூட்டத்தில்., மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை அறிவிக்காததற்கும், போதுமான நிதியை ஒதுக்காததற்கும் மத்திய அரசுக்கு அதிமுக செயற்குழுவில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ காப்பீடு பிரிமியத்திற்கு 18% ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யவும், வயநாடு நலசரிவை தேசிய பேரிடராக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Comments are closed.