Rock Fort Times
Online News

10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயம்…

 பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளதை அடுத்து அந்த மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், 10, 11, 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். அந்த வகுப்புகளில் மாணவர்களின் பாட சம்மந்தமான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்