நடுவானில் பறந்த போது விமானத்தில் எந்திர கோளாறு- திருச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு…!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூர் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென என்ஜினில் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த விமானம் திருச்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அந்த விமானத்தில் 143 பயணிகள், மற்றும் விமானிகள், பணிப்பெண்கள் என 167 பேர் இருந்தனர். அதில் சில பயணிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். அதனைத்தொடர்ந்து விமானத்தில் ஏற்பட்ட எந்திர கோளாறை சரி செய்யும் பணியில் தொழில் நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சீரமைப்பு பணியில் காலதாமதம் ஏற்பட்டால் பயணிகள் மாற்று விமானத்தில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. நடுவானில் விமானத்தில் எந்திர கோளாறு ஏற்பட்டு திருச்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Comments are closed.