தேர்தல் கவுண்டவுன் ஸ்டார்ட்…திருச்சி மேற்கு தொகுதியில் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி..!- இலக்கு நிர்ணயித்தது திமுக…
தமிழகத்தில் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு இப்போதே அரசியல் கட்சிகள் தயாராகிவிட்டன. ஏற்கனவே அதிமுக தலைமையில் பாஜக, அமமுக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணி முடிவு செய்யப்பட்டு தேர்தல் வேலைகள் தொடங்கி விட்டன. ஆளுங்கட்சியான திமுகவும் தற்போதைய கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தலை சந்திப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிகிறது. இந்நிலையில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற பாடுபட வேண்டும் என திருச்சி மாநகர திமுகவில் இலக்கு நிர்ணயத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருச்சி மேற்கு மாநகரத்திற்கு உட்பட்ட பொன்னகர் பகுதி திமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று பகுதி செயலாளர் மோகன்தாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் மத்திய மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் கே.வைரமணி, மாநகர செயலாளர் மு.அன்பழகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இதில் திமுக தகவல் தொழில்நுட்ப பணியின் வாட்ஸ்அப் சேனலில் இணைவதன் அவசியம் குறித்தும், சமூக வலைதளங்களில் எதிர்கட்சியினர் வீசும் விமர்சனங்களுக்கு எவ்வாறு வேகமாக பதிலடி தர வேண்டும் என்றும் கட்சியினருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறவேண்டும். அதற்காக இப்போதே களப்பணிகளை தொடங்கி அயராமல் பாடுபட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன
Comments are closed.