Rock Fort Times
Online News

எடப்பாடி பழனிசாமிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது”…- செங்கோட்டையன் தாக்கு..!

தமிழக வெற்றிக்கழக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பொதுவாக தமிழக மக்கள் இரண்டு இயக்கங்களே  ஆள வேண்டுமா? என்று சிந்தித்து வருகின்றனர். புதிதாக ஒருவர் தோன்ற வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. புதிய தலைமையை முடிவு செய்து விட்டனர். அந்த நோக்கத்தோடு எங்களது தமிழக வெற்றிக்கழகம் வீறுநடை போட்டு வருகிறது. தலைவர் விஜயை பற்றி மற்ற கட்சிகள் கருத்து சொல்லுவதற்கு காரணம், அவர்களுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அதனால் தான் எங்கள் தலைவரைப் பற்றி ஒவ்வொரு இயக்கங்களும் மாறி மாறி கருத்துகளை தெரிவித்து வருகின்றன. இளைஞர்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் 3 லட்சம் பேர் தமிழகத்தில் தேர்தல் எப்போது நடக்கப் போகிறது என்பதற்காக பதிவு செய்து காத்திருக்கும் வரலாறு, இந்திய வரலாற்றில் இடம் பெறப் போகிறது. புதிய தலைமை ஆள வேண்டும். அதுவும் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் ஆள வேண்டும் என்ற எண்ணம் புதிதாக வாக்களிக்க உள்ளவர்கள் மற்றும் அனைவரது மனதிலும் உள்ளது. எனவே 2026-ம் ஆண்டு எங்கள் தலைவர் விஜய் முதலமைச்சராக வருவார். 234 தொகுதிகளிலும் த.வெ.க வெற்றி பெறும். அ.தி.மு.க-வுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அதனால் தான் எங்கள் தலைவரைப் பற்றி அவர்கள் விமர்சித்து வருகின்றனர். வெற்றி பெற வேண்டும் என்றால் அவர்கள் தி.மு.க-வை தான் பேச வேண்டும். இதில் இருந்தே பி.டீமாக யார் செயல்படுகிறார்கள் என்பதை நாட்டு மக்கள் தெரிந்து கொள்ளட்டும். அவர் எந்த கருத்தை வேண்டுமானாலும் சொல்லட்டும். அதற்கு நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. தோல்வி பயம் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்ட காரணத்தால் தான் இப்படி பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். தேர்தல் அறிக்கை என்பது மொத்தமாக வழங்க வேண்டியது. ஆனால் தோல்வி பயம் வந்ததன் காரணமாகவே எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு நாளும் சிந்தித்து, சிந்தித்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகிறார் என்றார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்