Rock Fort Times
Online News

நீலகிரி மாவட்டத்திற்கு செல்ல இ-பாஸ் கட்டாயம்!- நாளை முதல் அமலுக்கு வருகிறது !

தமிழகத்தின் பிறப்பகுதிகளில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வரும் வாகனங்கள் அனைத்தும் இ-பாஸ் பெற்று வர வேண்டிய வழிமுறை நாளை ( ஏப் 1ம்) தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதுகுறித்து நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது., வார நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களுக்கும், வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்களுக்கும் இ- பாஸ் வழங்கப்படும். இந்த நடைமுறையில் நீலகிரி பதிவெண் கொண்ட வாகனங்களுக்கும், சரக்கு வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துகள் மருத்துவம், அவசரப் பணிகள் ஆகியவற்றில் ஈடுபடும் வாகனங்களுக்கு விலக்குகள் வழங்கப்படும். எனவே இந்த கோடை காலத்தில் நீலகிரிக்கு சுற்றுலா வருபவர்கள் அவசியம் இ-பாஸ் பெற்றே பயணம் செய்ய வேண்டும் இ-பாஸ் பெற https://epass.tnega.என்ற இணையதளத்தில் அப்ளை செய்து பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்