Rock Fort Times
Online News

திமுக எம்.பி. ஞான திரவியத்துக்கு நோட்டீஸ்…7 நாட்களுக்குள் பதில் அளிக்க கட்சி தலைமை உத்தரவு…

திருநெல்வேலி மாவட்டம் சி.எஸ்.ஐ. விவகாரத்தில் ஞான திரவியம் எம்.பி. தலையிடுவதாக புகார்கள் எழுந்தன. இந்தநிலையில் நேற்று சி.எஸ்.ஐ. மதபோதகர் ஒருவர் தாக்கப்பட்டார். இது தொடர்பான காணொலி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின. அதில் ஞான திரவியம் எம்.பி. மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில் தி.மு.க.தலைமை, எம்.பி. ஞான திரவியத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அனுப்பியுள்ள அந்த நோட்டீஸில், “நெல்லை நாடாளுமன்ற தொகுதி எம்.பி. ஞானத்திரவியம் கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் செயல்படுவதாக புகார்கள் வந்துள்ளன. இந்தப் புகார் குறித்த விளக்கத்தினை 7 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்