தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கோயம்புத்தூர் வடக்கு தொகுதி வேட்பாளராக பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் போட்டியிட அண்ணாமலை விரும்பியதாக கூறப்பட்ட நிலையில், அந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்காமல் போனது. இதனால் அவர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது.
இதனை மறுத்த வானதி சீனிவாசன், தன்னை வேட்பாளராக அறிமுகப்படுத்தும் கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்க இருப்பதாக தெரிவித்தார். இந்நிலையில், கோயம்புத்தூர் வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை அறிமுகப்படுத்தும்
கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த அனைத்து கட்சியினரும் கலந்து கொண்டனர். ஆனால், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை மட்டும் பங்கேற்கவில்லை. இது கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
வானதி சீனிவாசன் அறிமுக கூட்டத்தை அண்ணாமலை புறக்கணிக்கவில்லை. துக்க நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றதால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று காரணம் சொல்லப்படுகிறது.

Comments are closed.