திருச்சி, குமார வயலூரில் உள்ள முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு திருச்சி மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். விசேஷமான நாட்களில் கூட்டம் அதிகரித்து காணப்படும். அதேபோல முகூர்த்த நாட்களில் அதிகளவு திருமணங்கள் நடைபெறும். இக்கோவிலின் கும்பாபிஷேகம் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற உள்ளது. அதற்காக சுமார் ₹30 கோடி செலவில் திருப்பணிகள் நடந்து வருகிறது. எனவே, தைப்பூச திருவிழாவான இன்று(11-02-2025) தீர்த்தவாரியோடு வழக்கம்போல நடைபெறவில்லை. கோவிலில் குவிந்த பக்தர்கள் மூலஸ்தானத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமியையும், அதன் அருகே மற்றொரு கர்ப்ப கிரகத்தில் உள்ள ஆதிநாதர் மற்றும் அவரது துணைவி ஆதிநாயகி வடிவிலான சிவபெருமானையும் வழிபட்டு சென்றனர்.
இதேபோல, திருச்சி ஜங்ஷன் பகுதியில் அமைந்துள்ள வழி விடு வேல்முருகன் கோவிலிலும் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனர்.

Comments are closed.