திருச்சி வேத பாடசாலை மாணவர்கள் 3 பேர் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த வழக்கில் , தனக்கு முன் ஜாமீன் வழங்குமாறு வேத பாடசாலை பொறுப்பாளர் ஸ்ரீநிவாசராவ் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதி, ஸ்ரீநிவாசராவ் அலட்சியம் காரணமாக தான் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளதாக கருத்து தெரிவித்தார். மேலும் அவர் மீதான காவல்துறை விசாரணை முக்கியம் என்பதால் முன் ஜாமீன் வழங்க இயலாது என தெரிவித்தார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.