Rock Fort Times
Online News

முக்கொம்பு ஆற்றில் நீரில் மூழ்கி ஒருவர் பலி.

வாத்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்டமுக்கொம்பு காவிரி ஆற்றின் 36 மதகின் அருகில் இன்று  காலை குளித்துக் கொண்டிருந்த 2 நபர்கள் தண்ணீரில் மூழ்கி விட்டனர் .அதில் ஒருவரை அருகில் உள்ளவர்கள் காப்பாற்றினர் . மீட்கப்பட்ட நபர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த கீர்த்தி ஸ்ரீநிவாசன் (32) என்பது விசாரணையில் தெரியவந்தது. மற்றொரு நபரை தீயணைப்பு மீட்பு குழு உதவியுடன் இறந்த நிலையில் பிரேதத்தை மீட்டுள்ளனர் . இறந்தவர் தர்மபுரி நெல்லி நகரை சேர்ந்த ராஜசேகர் (31)என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அவரது உடல் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வாத்தலை போலீசார் அண்டை மாவட்டத்தைச் சேர்ந்த இவர்கள் இங்கு ஏன் வந்தார்கள் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்