Rock Fort Times
Online News

திருச்சியில் இருந்து பெங்களூருக்கு தினசரி ரயில் கோட்ட மேலாளரிடம் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

தென்னக ரயில்வே பயனாளர்கள் ஆலோசனை குழு கூட்டம் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் இன்று ( 23.06.2023 ) நடைபெற்றது. கூட்டத்தில் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் த.இனிகோ இருதயராஜ் மற்றும் ரயில்வே அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் , இனிகோ இருதயராஜ் ரயில்வே கோட்ட மேலாளரிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறப்பட்டு இருந்ததாவது:- வயது முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்ய ஏதுவாக அனைத்து பிளாட்பாரத்திலும் பேட்டரி கார் இயக்கப்பட வேண்டும். திருச்சியில் இருந்து பெங்களூருக்கு தினந்தோறும் பகலில் புதிய ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எஸ்கலேட்டர் பராமரிப்பு பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்