Rock Fort Times
Online News

மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலா்கள் காரசார விவாதம்..

அமமுக கவுன்சிலா் வெளிநடப்பு...

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று ( 30.06.2023 ) நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்சி மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை சீரமைப்பு பணிகள், பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள்,குடிநீர் பிரச்சினை, தெரு நாய்கள் தொல்லை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டம் தொடங்கியவுடன் கவுன்சிலர்கள் தங்களது பகுதி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அப்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கவுன்சிலர் செந்தில்நாதன் பேசுவதற்கு வாய்ப்பு கோரினார். ஆனால் தொடர்ந்து காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அமமுக கவுன்சிலர் செந்தில்நாதன், மேயர் அன்பழகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து கவுன்சிலர் செந்தில்நாதன் தனக்கு பேச வாய்ப்பளிக்காததை கண்டித்து கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார். மாமன்ற உறுப்பினர் தனது வார்டு பிரச்சினை குறித்து மாமன்ற கூட்டத்தில் தெரிவிக்க முடியும். இந்த நிலையில் தனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கூறி அம்மா மக்கள் முன்னேற்ற கழக கவுன்சிலர் செந்தில்நாதன் வெளிநடப்பு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு ஆதரவாக திமுக கவுன்சிலர் காஜாமலை விஜய் கருத்து தெரிவித்தார். கட்சி வாரியாக நேரம் ஒதுக்கி அமமுக கவுன்சிலருக்கும் பேச வாய்ப்பு அளித்திருக்க வேண்டும் என்று மேயரிடம் காஜாமலை விஜய் தெரிவித்தார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்